இந்தியா

பிரதமராக பதவி ஏற்றதும் மோடி முதல் வெளிநாடு பயணமாக இத்தாலி செல்ல வாய்ப்பு

Published On 2024-06-07 16:26 GMT   |   Update On 2024-06-07 16:26 GMT
  • இத்தாலி ஜி-7 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமையை பெற்றுள்ளது.
  • பிரதமர் மோடியை மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை நடைபெற்றது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. மோடி 3-வது முறையாக பிரதமராக இருக்கிறார்.

இதற்கான அனைத்து நடைவடைக்களையும் பாஜக மேற்கொண்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். மோடி 3-வது முறையாக பதவி ஏற்பது உறுயாகியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ராஜாங்க ரீதியிலான அட்டவணையை தயார் செய்ய தொடங்கியுள்ளது.

அதன்படி வெளியுறவுத்துறை மந்திரி ஜூன் 11-ந்தேதி ரஷியா சென்று பிரிக்ஸ் (BRICS) வெளியுறவுத்துறை மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அக்டோபர் மாதம் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கு தயாராகும் வகையில் இந்த கூட்மட் நடைபெற இருக்கிறது.

ஜூன் கடைசி வாரத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பிரதமர் மோடி அவருக்க விருந்து அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் SCO மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஜூலை மாதம் நடைபறெ இருக்கிறது.

ஜி7 மாநாடு அபுலியாவில் உள்ள போர்கோ எக்னாஜியாவில் ஜூன் 13-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. ஜி20 மாநாட்டின் அவுட்ரீச் செசன்ஸ் இத்தாலியில் உள்ள புக்லியாவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்துள்ளார். அதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டுள்ளார். ஜூன் 9-ந்தேதி பிரதமராக பதவி ஏற்கும் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமையை இத்தாலி பெற்றுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் உலகளாவிய பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம், பருவநிலை மாற்றம், ரஷியா- உக்ரைன் போர், இஸ்ரேல்- ஹமாஸ் போரால் ஏற்படும் பாதிப்பு போன்ற விசயங்கள் மீது கவனம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது.

ஜி7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கியதாகும். ஐரோப்பிய ஒன்றியம் ஒரு விருந்தினராக கலந்துரையாடல்களில் பங்கேற்கிறது.

Tags:    

Similar News