இந்தியா

அலுவலகத்தில் இருந்து பிரதமர் மோடி, அமித்ஷா படங்களை அகற்ற மறுக்கும் ஜெகதீஷ் ஷெட்டர்

Published On 2023-05-06 04:32 GMT   |   Update On 2023-05-06 04:32 GMT
  • ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார்.
  • காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும், பா.ஜனதா தலைவர்களின் புகைப்படங்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரு

முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சீட் கொடுக்காத காரணத்தால், அக்கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்துள்ளார். ஆனாலும் உப்பள்ளியில் உள்ள ஜெகதீஷ் ஷெட்டரின் அலுவலகத்தில் பிரதமர் மோடி, அமித்ஷாவின் புகைப்படங்களும், மோடி, அமித்ஷாவுடன் ஜெகதீஷ் ஷெட்டர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அகற்றப்படாமல், அப்படியே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும், பா.ஜனதா தலைவர்களின் புகைப்படங்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், 'ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் சேர்ந்ததும், உடனடியாக முந்தைய கட்சி தலைவர்களின் புகைப்படங்களை அகற்றுவது சரியானது இல்லை. நான் அப்படி முந்தைய கட்சியின் தலைவர்களின் புகைப்படங்களை மாற்ற மாட்டேன்' என்றார். அதே நேரத்தில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் வெற்றி பெறுவதற்காக பா.ஜனதா தலைவர்களின் புகைப்படங்களை ஜெகதீஷ் ஷெட்டர் அகற்றாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags:    

Similar News