இந்தியா

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: வரும் 15-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார் மந்திரி ஜெய்சங்கர்

Published On 2024-10-04 22:45 GMT   |   Update On 2024-10-04 22:45 GMT
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
  • இதில் பங்கேற்க வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான குழு பாகிஸ்தான் செல்கிறது.

புதுடெல்லி:

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர்கள் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அல்லது பாதுகாப்புத்துறை மந்திரியரே கடந்த காலங்களில் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பங்கேற்று இருந்தார்.

இந்நிலையில், இந்த ஆண்டு நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.

அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அவர் பாகிஸ்தானில் தங்கியிருக்க உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்கிறார்.

Tags:    

Similar News