இந்தியா

கங்கை நதியில் யோகா பயின்ற ஜப்பான் தூதர்

Published On 2024-01-05 09:59 GMT   |   Update On 2024-01-05 09:59 GMT
  • பதிவை பார்த்த பயனர்கள் பலரும் ஹிரோஷியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
  • யோகா உடலுக்கும், மனதுக்கும் அற்புதமானது என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசூகி வாரணாசி, ரிஷிகேஷிக்கு சுற்றுப்பயணம் செய்தார். ரிஷிகேஷியில் பல இடங்களுக்கு சென்று அழகை ரசித்த அவர், அங்கு கங்கை நதியில் குளிர்ந்த நீரில் கால்களை நனைத்தபடியும், கைகளை விரித்து நின்று யோகா பயின்ற புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு பயிற்சியாளரிடம் இருந்து யோகா கற்றுக்கொள்ளும் காட்சிகள் உள்ளது. பயிற்சியாளரின் அறிவுறுத்தல்படி ஹிரோஷி கைகளை நீட்டுவது, வார்ம் அப் செய்வது மற்றும் யோகா பயிற்சி செய்வது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளது. மேலும் அவர் தனது பதிவில், நான் தற்போது ரிஷிகேஷியில் இருக்கிறேன்.

இங்கு யோகா கற்கிறேன் என பதிவிட்டுள்ளார். பதிவை பார்த்த பயனர்கள் பலரும் ஹிரோஷியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், பாரதம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீதான உங்கள் அன்பு ஆச்சரியமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் சார். யோகா உடலுக்கும், மனதுக்கும் அற்புதமானது என கூறியுள்ளார்.

Tags:    

Similar News