இந்தியா
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கராத்தே ஆசிரியருக்கு 110 ஆண்டுகள் சிறை தண்டனை
- வழக்கு விசாரணை ஈரட்டுப்பேட்டை சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
- அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது55). கராத்தே ஆசிரியரான இவர் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பேரில் முண்டக்காயம் போலீசார் வழக்குப்பதிந்து மோகனனை கைது செய்தனர்.
மோகனன் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஈரட்டுப்பேட்டை சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் குற்றம் சாட்டப்பட்ட மோகனனுக்கு 110 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ2.75லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரோஷன் தாமஸ் தீர்ப்பு கூறினார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.