இந்தியா
null

கார்கே என்னை மிரட்டுகிறார்.. போட்டுடைத்த ராகுல் - நடப்பது என்ன?

Published On 2024-06-18 03:10 GMT   |   Update On 2024-06-18 05:52 GMT
  • மல்லிகார்ஜுன கார்கே ராகுலின் மனதை மாற்றுவதற்கு பல தந்திரங்களை கையாண்டுள்ளாராம்.
  • பதவியை ஏற்கவில்லை என்றால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்

மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றுள்ள ராகுல் காந்தி வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுத்துள்ளார். இதற்கிடையில் ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர வைக்க காங்கிரஸ் தொடக்கம் முதலே படாத பாடுபட்டு வருகிறது.

 

ஆனால் ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுத்து இதுவரை காங்கிரஸ் காமிட்டியினருக்கு பிடி கொடுக்கமாலேயே இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் கூட ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கும்படி தலைவர் கார்கே உட்பட கமிட்டியினர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

 

குறிப்பாக மல்லிகார்ஜுன கார்கே ராகுலின் மனதை மாற்றுவதற்கு பல தந்திரங்களை கையாண்டுள்ளாராம். அதாவது, ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கவில்லை என்றால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று செல்லமாக மிரட்டியுள்ளாராம்.

 

இதுகுறித்து செய்தியாளர்கள் ராகுலிடன் கேள்வியெழுப்பிய நிலையில் அதற்கு அவர், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து முடிவெடுத்த பின்னர் அவர் [கார்கே] அறிவிப்பார், அவர் [கார்கே] என்னை மிரட்டியது உண்மைதான் என்று புன்னகையுடன் தெரிவித்தார்.

 

நடந்த முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமயிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைபற்றி பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிரான மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. முன்னதாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தியை தான் பிராமராக தேர்ந்தெடுப்பேன் என்று கார்கே கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News