மாணவர்களுக்கு தெரிந்த மொழியில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்: சித்தராமையா
- இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவு
- மறுபரிசீலனை செய்யக்கோரி மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன்
மத்திய அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகிறது. இதனால் இந்தி அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டு படிக்கும் மாநிலங்களின் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியில் தேர்வு நடத்தப்படுவதால், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், மத்திய அரசை கண்டித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, குழந்தைகளுக்கு (மாணவ- மாணவிகள்), அவர்களுக்கு தெரிந்த மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
இதுகுறித்து மறுபரிசீலனை செய்யக்கோரி மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன். வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளை இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற மத்திய அரசு முடிவை நாங்கள் எதிர்க்கிறோம்'' என்றார்.