ஒவ்வொரு கருக்கலைப்புக்கும் ரூ.30 ஆயிரம் வசூல்.. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட மருத்துவர் அதிரடி கைது
- கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்பு.
- மருத்துவமனையின் மேலாளர் மீனா மற்றும் வரவேற்பாளர் ரிஸ்மா கான் ஆகியோரும் கைது.
கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த மருத்துவர் மற்றும் உதவியாளர் ஆகியோர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதை அடுத்து இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்ததாகக் கூறப்படும் மருத்துவர் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை பெங்களூரு போலீஸார் கைதுள்ளனர்.
மருத்துவர் சந்தன் பல்லால் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் நிசார் ஆகியோர் ஒவ்வொரு கருக்கலைப்புக்கும் 30,000 ரூபாய் வசூலித்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த மருத்துவமனையின் மேலாளர் மீனா மற்றும் வரவேற்பாளர் ரிஸ்மா கான் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சந்தேக நபர்களை பிடிக்க அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.