இந்தியா
எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கிகளுக்கு எதிரான உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த கர்நாடக அரசு
- கர்நாடக அரசின் நிதியை வங்கிகள் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
- இந்த பிரச்சனைகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட வங்கிகள் 15 நாட்கள் அவகாசம் கோரின.
கர்நாடகாவின் அனைத்து அரசு துறைகளும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள தங்களது கணக்குகளை மூடி, வைப்புத் தொகைகளை உடனடியாக மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள அரசு நிதியை வங்கிகள் தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்தது.
இந்நிலையில், இந்த பிரச்சனைகளை சரிசெய்ய 15 நாட்கள் அவகாசம் கோரி சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் கர்நாடக அரசிடம் வலியுறுத்தினர்.
வங்கிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த உத்தரவை 15 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.