அரசுப்பள்ளிகளை பாதுகாக்க தனியார் பள்ளிகளை புறக்கணிக்கும் கிராம மக்கள்
- கடந்த 20 ஆண்டுகளாக இக்கிராமத்தில் இருந்து ஒருவர் கூட தனியார்ப் பள்ளியில் படிக்கவில்லை.
- இதுவரை தனியார்ப் பள்ளி வாகனங்கள் எதுவும் இக்கிராமத்திற்கு வந்ததில்லை.
அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்க்கும் கர்நாடக கிராம மக்களின் முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மாதகவுடனகோப்பலு கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டும் தான் சேர்க்கின்றனர்.
அரசுப் பள்ளிகளை ஊக்குவிக்கவும் கன்னட மொழியை பாதுகாக்கவும் தனியார் பள்ளிகளை இக்கிராம மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக இக்கிராமத்தில் இருந்து ஒருவர் கூட தனியார்ப் பள்ளியில் படிக்கவில்லை. இதுவரை தனியார்ப் பள்ளி வாகனங்கள் எதுவும் இக்கிராமத்திற்கு வந்ததில்லை.
தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, இக்கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இக்கிராமத்தில் இருந்து அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களில் பணிபுரிகின்றனர்.