இந்தியா
ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் கேரள வாலிபர் குற்றவாளி: 19ம் தேதி தண்டனையை அறிவிக்கிறது என்ஐஏ கோர்ட்
- ஷைபு என்பவர் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கூறி கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- இந்த வழக்கு தொடர்பான விசாரணை எர்ணாகுளம் தேசிய புலனாய்வு கோர்ட்டில் நடந்து வந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு வளைகுடா நாடுகளுக்கு சென்ற சிலர் அங்கு தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக புகார் எழுந்தது.
இதற்கிடையே கேரளாவை சேர்ந்த வாலிபர் ஷைபு என்பவர் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கூறி கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை எர்ணாகுளம் தேசிய புலனாய்வு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் கேரள வாலிபர் ஷைபு குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை விபரத்தை வருகிற 19-ந் தேதி தெரிவிக்கப்படும் எனவும் அறிவித்தார்.