இந்தியா

பெண் தேர்வரின் அந்தரங்க உறுப்பில் சோதனை.. விரைந்து விசாரிக்க முதல்வர் உத்தரவு

Published On 2024-09-16 16:09 GMT   |   Update On 2024-09-16 16:09 GMT
  • தேர்வு எழுத வந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்துள்ளார்.
  • இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஹிமாந்த பிஷ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.

நேற்று அசாம் நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வு அம்மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வு எழுத வந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்ததாக கூறிய குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு முடிந்த பின்பு சமூக ஊடகங்களில் அப்பெண் இதுகுறித்து பகிர்ந்த பின்பு இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தாங்களும் இதேபோன்ற சங்கடத்தை அனுபவித்ததாக வேறு சில பெண்களும் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் அசாம் மாநிலத்தில் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேர்வு எழுத வந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை பெண் காவலர் சோதனை செய்தது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஷ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர், "என்னைப் பொறுத்தவரை, எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியம் மற்றும் மரியாதை மிகவும் முக்கியமானது. வடக்கு லக்கிம்பூரில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் டிஜிபி என்னிடம் தெரிவித்தார். அதே நாளில் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையில் இருந்து மோசடி செய்வதற்கான பொருட்கள் கிடைத்தன" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News