மணிப்பூர் முதல் குமரி வரை.. சிரிக்கும் பாலியல் குற்றவாளிகள் .. மோடியை சாடிய பிரகாஷ்ராஜ்
- குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது
- குர்மீத் ராம் ரஹீம் சிங் [பிறந்தநாள் கொண்டாடவும்], ஆஷ்ரம் பாபு [Asaram Bapu] ஆயுர்வேத சிகிச்சை பெறவும் தற்போது பரோலில் வெளி வந்துள்ளதுள்ளனர்
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மிக நீண்ட உரையினை நேற்றைய தினம் நிகழ்த்தினார். அவரது உரையில், எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்க இது அவசியம்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும்போது ஊடகங்களில் அதிகம் பேசுகிறது. ஆனால், இப்படிப்பட்ட வக்கிரமானவர்களுக்கு தண்டனை கிடைத்தால் அது செய்திகளில் பெரிதாகக் காணப்படுவதில்லை. குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது. இந்த பயத்தை உருவாக்குவது முக்கியம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதை விமர்சிக்கும் வகையில் நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது. மோடியின் உரையைப் பகிர்ந்து அவர், மணிப்பூர் முதல் கன்னியாகுமரி வரை விடுதலையாகி வெளியே உள்ள பாலியல் குற்றவாளிகள் [RAPISTS] தற்போது சிரித்துக் கொண்டுள்ளனர் [Laughing in the corner]. எப்போது நீங்கள் சொல்வதுபோல் நடந்து கொல்லப்போகிறீர்கள்#justasking என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பாலியல் குற்ற வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் மதத் தலைவர்களான குர்மீத் ராம் ரஹீம் சிங் [பிறந்தநாள் கொண்டாடவும்], ஆஷ்ரம் பாபு [Asaram Bapu] ஆயுர்வேத சிகிச்சை [பெறவும்] தற்போது பரோலில் வெளி வந்துள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது.