எஞ்சினில் மோதிய பறவைகள்- அவசரமாக டெல்லியில் தரையிறங்கிய விமானம்
- அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
135 பயணிகளுடன் டெல்லியில் இருந்து லடாக்கின் லே நகருக்க புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் டெல்லியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று காலை 10.30 மணிக்கு விமானம் புறப்பட்ட நிலையில், சுமார் 30 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமான எஞ்சினில் பறவைகள் மோதியுள்ளன. எஞ்சினில் பறவைகள் மோதியதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பறவைகள் எஞ்சினில் மோதும் போது, இவ்வாறு அவசரமாக தரையிறக்கும் நடைமுறை சாதாரணமானது தான் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டதை அடுத்து இன்று மதியம் 12.20 மணிக்கு லே நகரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் லே விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.