இந்தியா

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அத்வானி கலந்து கொள்ளவில்லை: காரணம் இதுதானாம்...

Published On 2023-12-19 03:16 GMT   |   Update On 2023-12-19 03:16 GMT
  • கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் அனைத்தும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து விடும்.
  • ஜனவரி 16-ந்தேதி கும்பாபிஷேகம் தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறும்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வேலைகள் அனைத்தும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் முடிவடைந்து விடும். ஜனவரி 16-ந்தேதி கும்பாபிஷேகம் தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களில் பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இருவரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இருவரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் "எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குடும்பத்தின் மூத்தவர்கள். அவர்களின் வயதை கருத்தில் கொண்டு, அயோத்திக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருவரும் அதை ஏற்றுக் கொண்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News