பாஜக-வை தோற்கடிக்க முடியும் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது: உத்தவ் தாக்கரே
- 400 இடங்களை இலக்காக கொண்டு பாஜக களம் கண்டது.
- 400 இடங்களை இலக்காக கொண்டு பாஜக களம் கண்டது.
மக்களவை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை பிடிக்க முடியவில்லை.
தேர்தலுக்கு முன்னதாக 400 இடங்கள் என்பதை இலக்காக கொண்டு பாஜக களம் இறங்கியது. தங்களை ஒரு தோற்கடிக்க முடியாத கட்சியாக பாஜக கருதியது. பாஜக-வை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. அதற்காகத்தான் இந்தியா கூட்டணி உருவாகியது.
மக்களவை தேர்தலில் பாஜக-வால் தனித்து பெரும்பான்மை பெற முடியாமல் போனது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடிவு, பாஜக-வை தோற்கடிக்க முடியும் என்பதை காட்டுகிறது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில் "பாஜக-வை தோற்கடிக்க முடியும் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. பாஜக-வை தோற்கடிக்க முடியாது என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற எம்.பி.க்களை உத்தவ் தாக்கரே சந்தித்து வருகிறார். அவர்கள் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.