இந்தியா

URGENT MAKE AN ACCIDENT... வைரலாகும் நெடுஞ்சாலைத்துறையின் எச்சரிக்கை பலகை

Published On 2024-07-03 06:05 GMT   |   Update On 2024-07-03 06:05 GMT
  • உண்மையான மொழிபெயர்ப்பு “அதிக வேகமே விபத்துகளுக்கு காரணம்" ஆகும்.
  • பதிவு வைரலாகி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், அதே சமயம் பாராட்டும் விதமாகவும் அமையும். மேலும் சில வீடியோக்கள் சர்ச்சைக்குள்ளாகும். அந்த வகையில், கர்நாடகாவில் நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள வழிகாட்டி பலகை தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கர்நாடகாவின் குடகு அருகே நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள வழிகாட்டி பலகை கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது. "அவசரவே அபகதக்கே கரனா" என்ற கன்னட சொற்றொடரின் தவறான மொழிபெயர்ப்பாக ஆங்கிலத்தில் "அவசரமாக ஒரு விபத்தை உண்டாக்குங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. இதன் உண்மையான மொழிபெயர்ப்பு "அதிக வேகமே விபத்துகளுக்கு காரணம்" ஆகும்.

கொடகு கனெக்ட் என்ற பயனர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள இந்த பதிவு வைரலாகி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், இதற்கும் கூட chatgpt-ஐ பயன்படுத்துக்கள் என்றும் மற்றொருவர் "அவசரத்திற்குப் பிறகு ஒரு கமா வைத்தால் பொருள் முற்றிலும் மாறும்" என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News