இந்தியா

'லவ் ஜிகாத்': FB-ல் இந்து பெயரை வைத்து பெண்களை கவர்கிறார்கள்- அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

Published On 2024-08-05 12:11 GMT   |   Update On 2024-08-05 12:11 GMT
  • பா.ஜ.க. ஆட்சி செய்யும் உ.பி.யில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் உள்ளது.
  • அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாஜகவினர் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனையொட்டி பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக யோகி அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில், பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், " பேஸ்புக்கில் இந்து பெயர்களை வைத்துக்கொண்டு இந்து பெண்களை கவர்ந்து சிலர் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தான் அந்த பையன் இந்து இல்லை என்பது அந்த பெண்ணிற்கு தெரியவருகிறது. இப்படி பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

லவ் ஜிகாத் குறித்த பாஜக ஆளும் மாநில அரசுகளின் இந்த முடிவுகள், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. 

Tags:    

Similar News