இந்தியா

மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய நெறிமுறைக்குழு பரிந்துரை?

Published On 2023-11-09 03:49 GMT   |   Update On 2023-11-09 03:49 GMT
  • பாராளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் எழுப்ப பணம் பெற்றதாக குற்றச்சாட்டு.
  • மக்களவை உறுப்பினருக்கான லாக்கின், பாஸ்வேர்டுகளை பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டு.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக பாராளுமன்ற அவையில் கேள்விகள் எழுப்ப பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், பாராளுமன்ற மக்களவையில் எம்.பி.களுக்கு வழங்கப்பட்ட உறுப்பினருக்கான லாக்கின், பாஸ்வேர்டு ஆகியவற்றை தொழில் அதிபருக்கு பகிர்ந்ததாகவும், அவர் அதை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொர்டர்பாக பாராளுமன்ற மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மஹுமா மொய்த்ரா இந்த குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிக்காமல் மஹுமா மொய்த்ரா வெளியேறினார்.

விசாரணைக்குப் பிறகு இன்று வினோத் குமார் தலைமையிலான நெறிமுறைக்குழு வரைவு அறிக்கை தயார் செய்கிறது. அப்போது மஹுமா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை உறுப்பினர் உள்நுழைவுச் சான்றுகளை தொழில் அதிபருடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொய்த்ராவின் நடத்தை மிகவும் ஆட்சேபனைக்குரியது, நெறிமுறையற்றது மற்றும் குற்றமானது எனக் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அரசால் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நெறிமுறைக்குழு அறிக்கை தாக்கல் செய்தபின், பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் நடவடிக்கை மேற்கொள்வார். அரசு விசாரணை நடத்த உத்தரவிடுமா? என்பது அப்போதுதான் தெரியவரும்.

Tags:    

Similar News