இந்தியா

மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிக வாக்குகள் பெற்ற பா.ஜனதா

Published On 2023-12-04 04:59 GMT   |   Update On 2023-12-04 06:17 GMT
  • 2013-ல் பா.ஜனதா 44.88 சதவீதம் வாக்குகளுடன் 165 இடங்களை பெற்றிருந்தது.
  • காங்கிரஸ் 36.38 சதவீத வாக்குகளுடன் 58 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது

மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அல்லது கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி வாகை சூடி அமோக வெற்றி பெற்றுள்ளது. 230 இடங்களில் 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட பா.ஜனதா தற்போது அதிகமாக 7 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. 2018-ல் பா.ஜனதா 41.02 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது 48.55 சதவீதம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது.

காங்கிரஸ் கடந்த தேர்தலில் 40.89 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது, தற்போது 40.40 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. ஏறக்குறைய ஒரே வாக்கு சதவீதமாக இருந்தாலும் 114 இடங்களில் இருந்து 66 இடங்களாக குறைந்துள்ளன.

2013-ல் பா.ஜனதா 44.88 சதவீதம் வாக்குகளுடன் 165 இடங்களை பெற்றிருந்தது. காங்கிரஸ் 36.38 சதவீத வாக்குகளுடன் 58 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

2008-ல் 37.64 சதவீத வாக்குகளுடன் 143 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 71 இடங்களுடன் 32.39 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.

2003-ல் பா.ஜனதா 173 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அப்போது 42.50 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. காங்கிரஸ் 38 தொகுதிகளுடன் 31.6 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.

Tags:    

Similar News