மாமா எர்த் பொருட்களில் தரம் இல்லை.. கிழித்தெடுத்த Influencer
- மாமா எர்த் 2016 ஆம் ஆண்டில் காஸல் அலாக் மற்றும் வருண் தம்பதிகள் இருவராலும் தொடங்கப்பட்ட ஒரு ஸ்கின் கேர் நிறுவனமாகும்,
- மாமா எர்த் பொருட்கள் நீங்கள் உபயோகித்து கொண்டு இருந்தால் அதை உடனே குப்பையில் எறிந்து விடுங்கள்" என ஒரு பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.
மாமா எர்த் 2016 ஆம் ஆண்டில் காஸல் அலாக் மற்றும் வருண் தம்பதிகள் இருவராலும் தொடங்கப்பட்ட ஒரு ஸ்கின் கேர் நிறுவனமாகும், மார்கெட்டில் உள்ள பெரும்பாலும் ஸ்கின் கேர் பொருட்களில் நிறைய கெமிகல்களும் , நச்சு தன்மை அதிகம் உடைய வேதி பொருட்களையும் கலக்கின்றனர்.
இதனால் அந்த பொருட்களை நாம் உபயோகிக்கும் பொழுது நமக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காக முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயார் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான் மாமா எர்த்.
மாமா எர்த்தின் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து இன்று பிரபல நிறுவனமாக திகழ்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் அதிதி என்பவர்," மாமா எர்த் பொருட்கள் நீங்கள் உபயோகித்து கொண்டு இருந்தால் அதை உடனே குப்பையில் எறிந்து விடுங்கள்" என ஒரு பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.
இந்த பதிவு எக்ஸ் பக்கத்தில் வைரலாகி, பத்து லட்சத்திற்கும் அதிக பார்வைகளை பெற்றது. இப்பதிவிற்கு மாமா எர்த்தின் சி.இ.ஓ. ஆன காசல், "வணக்கம் அதிதி , காலையில் இவ்வளவு வெறுப்புணர்வோடு இருபீங்கன்னு நான் நினைக்கவில்லை, உங்களுக்கு எங்களோட பொருட்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் கூறுங்கள் அதை சரி செய்து தருகிறோம்" என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அதிதி, "எப்படி நியாயமான கருத்து பதிவை நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்கள், இது எனக்கு மட்டும் நடந்தது அல்ல மக்களில் நிறைய பேர் இதை உணர்கிறார்கள், உங்கள் பொருட்களில் தரம் இல்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார். இவர் செய்த பதிவிற்கு மக்கள் அதற்கு ஆதரிக்கும் வகையில் அதிகளவில் மாமா எர்த் பொருட்களின் மீது குற்றம் சாட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
சாசி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஐடி செல் மற்றும் ஆர்.சி.பி. சோக்கர் கூட்டமைப்பின் சி.இ.ஓ. என்பது குறிப்பிடத்தக்கது