மோடி மெஜாரிட்டி பெறாதது மகிழ்ச்சி அளிக்கிறது: மம்தா பானர்ஜி
- பிரதமர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்.
- அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி சுமார் 230 தொகுதிகளிலா் முன்னிலை வகிக்கிறது.
400 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக்கூறிய பிரதமர் மோடிக்கு இது தோல்வி என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "பிரதமருக்கு ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த முறையை பாஜக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனக் கூறினார்.
மிகப்பெரிய அளவில் கொடுமைகள் செய்த பிறகும், பணம் செலவழித்த பிறகும் மோடி மற்றும் அமித் ஷாவின் ஆணவத்தை இந்தியா கூட்டணி வென்றது. மோடி தோல்வியடைந்துள்ளார். அயோத்தியாவில் கூட தோல்வியடைந்துள்ளார்.
மோடியை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும், இந்தியா கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருதற்கான முயற்சியை மேற்கொள்வேன். பிரதமர் மோடி ஏராளமான கட்சிகளை உடைத்துள்ளார். மக்கள் அவரின் உறுதியை உடைத்துள்ளனர்" என்றார்.