2 இடம்தான் என சொன்ன மம்தா: பிச்சை கேட்கவில்லை என காங்கிரஸ் தலைவர் பதிலடி
- மம்தா பானர்ஜி, தேர்தலில் இந்தியா கூட்டணியாக போட்யிடுவோம் என்ற சொல்லி வருகிறார்.
- கூட்டணி இல்லை என்றால், பிரதமர் மோடி மிகவும் மகிழ்சசியடைவார்.
மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. பா.ஜனதா கட்சி அதற்கு ஆயத்தமாகி வருகிறது. அதேபோல் பா.ஜனதாவை எதிர்க்க இந்தியா கூட்டணி தங்களை தயார் படுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்படும் எனத் தெரிகிறது.
இது சரி செய்யப்பட்டால் இந்தியா கூட்டணி பிரதமர் மோடிக்கு வலுவான எதிர்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு இந்தியா கூட்டணிதான் போட்டியிடும் என மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் தொகுதி பங்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள்தால் வழங்குவோம் என மம்தா பானர்ஜி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இது காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு அதிர்ச்சியளித்துள்ளது. மேலும், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் எம்.பி.யும், அக்கட்சியின் மக்களவை தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை ஆத்திரமடையச் செய்துள்ளது.
இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது-
யாரை பிச்சைக்கேட்டார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் பிச்சை கேட்கவில்லை. மம்தா பானர்ஜி, தேர்தலில் இந்தியா கூட்டணியாக போட்யிடுவோம் என்ற சொல்லி வருகிறார். ஆனால் எங்களுக்கு இரண்டு தொகுதிகள் எனத் தெரிவித்துள்ளார். நாங்கள் அவரிடம் கருணை கேட்கவில்லை. நாங்கள் எங்களுடைய சொந்த பலத்தில் போட்டியிட முடியும்.
கூட்டணி இல்லை என்றால், நாட்டில் யார் அதிகம் மகிழ்ச்சியடைவார்?. கூட்டணி இல்லை என்றால், பிரதமர் மோடி மிகவும் மகிழ்சசியடைவார். மம்தா பானர்ஜி செய்வது மோடிக்கு சேவை செய்வதாகும்.
இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.