இந்தியா
ஜனாதிபதியின் ஜி20 விருந்தில் மம்தா பானர்ஜி பங்கேற்பு
- ஜி20 மாநாடு நடைபெற இருப்பதால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
- வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் மம்தா சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதற்கிடையே, செப்டம்பர் 9ம் தேதி அன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று விருந்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரும் சனிக்கிழமை புதுடெல்லிக்கு செல்ல உள்ளார்.
மேலும், இந்நிகழ்வில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் மம்தா சந்திக்கவுள்ளதாகவும், அவருடன் நல்லுறவை பகிர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.