இந்தியா

உணவு வினியோகம் செய்ய 'டிரோன்' உருவாக்கிய வாலிபர்

Published On 2023-08-03 06:09 GMT   |   Update On 2023-08-03 06:09 GMT
  • உணவு வினியோகம் செய்வதற்காக ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் சுயமாக ஒரு டிரோனை உருவாக்கி அசத்தி உள்ளார்.
  • வீடியோ 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.

சமீபகாலமாக ஆன்லைன் மூலம் ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் செல்வார்கள். ஆனால் உணவு வினியோகம் செய்வதற்காக ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் சுயமாக ஒரு டிரோனை உருவாக்கி அசத்தி உள்ளார்.

சோஹன்ராய் என்ற அந்த ஊழியர் நீண்ட தூரம் பயணித்து உணவு வினியோகம் செய்ய வேண்டி இருந்ததால் அடிக்கடி போக்குவரத்தில் சிக்கி கொண்டதோடு, களைத்தும் போனார். இதனால் விரைவாக உணவு வினியோகம் செய்வதற்காக திட்டமிட்ட அவர் 'டிரோன்' உருவாக்கி உணவு வினியோகத்திற்கு பயன்படுத்த சோதனைகளை மேற்கொண்ட காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News