இந்தியா

டாக்டர் கண்முன்னே மாரடைப்பால் இறந்த நபர்- வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Published On 2024-08-19 07:58 GMT   |   Update On 2024-08-19 07:58 GMT
  • பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இருந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
  • டாக்டரிடம் சோதனைக்காக வந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டரிடம் சோதனைக்காக வந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு நபர் உடல் சோதனைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவரை டாக்டர் சோதித்து கொண்டிருக்கிறார். சோதித்து கொண்டிருக்கும் போதே அந்த நபர் சரிந்து விழுகிறார். உடனே டாக்டர் சோதித்து பார்க்கிறார். அதில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இருந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவில் 15 முதல் 30 வயதிற்குட்டபட்ட மக்கள் மாரடைப்பால் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

Similar News