பாராளுமன்ற மக்களவையில் வண்ண புகை குண்டு வீச்சு: மூளையாக செயல்பட்டவர் போலீசில் சரண்
- பாராளுமன்றத்திற்கு உள்ளே இருவரும், வெளியே இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.
- 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவை நடைபெறும் இடத்திற்குள் திடீரென இரண்டு பேர் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர். அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் மஞ்சள் புகைப்படும் வெளிப்படும் புகை குண்டுகளை வீசினர். இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மூளையாக செயல்பட்டவர் லலித் ஷா என விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் லலித் ஷா கர்தாவ்யா காவல் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த லலித் ஷாவை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய அரசு மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். அமித் ஷா, மோடி மக்களவையில விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
மக்களவையில் அவை நடவடிக்கைக்கு இடையூறாக செயல்பட்டதாக கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.