இந்தியா (National)

எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ.வாகவும் தொடர அனுமதிக்க வேண்டும்: இந்தியா கூட்டணி எம்.பி. வலியுறுத்தல்

Published On 2024-06-18 14:36 GMT   |   Update On 2024-06-18 14:36 GMT
  • அமெரிக்காவில் இதுபோன்று இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் ஏன் இருக்கக் கூடாது?.
  • இரண்டு பதவிகள் இருப்பதில் என்ன பாதிப்பு? மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

நடைபெற்று முடிந்த இந்திய மக்களவை தேர்தலில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த பலர், போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய லோக்தன்திரிக் கட்சி (RLP) இந்த தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் நகாயுர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டது. அக்கட்சி ஏற்கனவே எம்.எல்.ஏ-வாக இருந்த ஹனுமான் பெனிவாலை நிறுத்தியது. அவரும் வெற்றி பெற்றார்.

இதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானால் இரண்டு பதவிகளையும் நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் இதுபோன்று இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் ஏன் இருக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "இரண்டு பதவிகள் இருப்பதில் என்ன பாதிப்பு? மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்" என்றார்.

பெனிவால் கின்வ்சார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஆர்எல்பி போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டத்திற்குப் பதிலாக பழைய முறைப்படி ராணுவத்திற்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். நீட் முறைகேடு தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News