மோடிக்கு 'மெமரி லாஸ்'.. ஜோ பைடன் நிலையில் நமது பிரதமர் - ராகுல் காந்தி அட்டாக்
- பிரதமர் மோடிக்கு [74 வயது] அமெரிக்க அதிபர் ஜோ பைடனை [81 வயது] போன்று ஞாபக மறதி உள்ளதாக விமர்சித்துள்ளார்.
- 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தாராவி நிலத்தை, மகாராஷ்டிராவின் ஏழை மக்களின் நிலத்தை, தங்களது நண்பர் கௌதம் அதானிக்கு கொடுக்க துடிக்கின்றனர்.
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. களத்தில் உள்ள பாஜக [ மகாயுதி] கூட்டணிக்கும் காங்கிரசின் மகா விகாஸ் அகாதி இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் இன்று பிரசாரம் மேற்கொண்ட மக்களை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு [74 வயது] அமெரிக்க அதிபர் ஜோ பைடனை [81 வயது] போன்று ஞாபக மறதி உள்ளதாக விமர்சித்துள்ளார்.
அமராவதி பிரசாரத்தில் பேசிய ராகுல், அதானியின் தாராவி திட்டத்திற்காக கடந்த 2022 இல் மகாராஷ்டிர அரசையே பாஜக கவிழ்த்தது. மோடியும் அமித் ஷாவும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தாராவி நிலத்தை, மகாராஷ்டிராவின் ஏழை மக்களின் நிலத்தை, தங்களது நண்பர் கௌதம் அதானிக்கு கொடுக்க துடிக்கிறனர்.
இதனாலேயே மகாராஷ்டிர அரசு மக்களாகிய உங்களின் கைகளில் இருந்து பாஜகவால் பறிக்கப்பட்டது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மகாராஷ்டிர அரசை திருடிய பாஜக அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக கூறிவது எப்படி.
எனது சகோதரி [பிரியங்கா காந்தி] சமீபத்தில் தான் மோடி பேசியதை கேட்டது பற்றி கூறிக்கொண்டிருந்தார். தனது சமீப கால பேச்சுக்களில் மோடி சொன்னதையே மீண்டும் மீண்டும் மோடி கூறி வருகிறார். எனக்கு தெரியவில்லை, ஒரு வேலை அவருக்கு ஞாபக மறதி வந்திருக்கலாம்.
அமெரிக்க முன்னாள் அதிபருக்கு தனக்கு பின்னல் இருந்து ஒருவர் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டுமாம், உக்ரைன் அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரை ரஷிய அதிபர் புதின் என அமெரிக்க அதிபர் [ஜோ பைடன்] அறிமுகப்படுத்தினார். அவர் தனது ஞாபகத்தை இழந்துவிட்டார். அதே போல நமது பிரதமரும் ஞாபகத்தை இழந்து வருகிறார் என்று ராகுல் விமர்சித்தார்.