ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு ஹேமந்த் சோரன்தான் பொறுப்பு: அமித் ஷா
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக 20-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
- நவம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே கடந்த 13-ந்தேதி 43 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துவிட்டது. 38 தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி நடைபெற இருக்கிறது.
பா.ஜ.க. தலைவர்களும், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் ஊடுருபவர்கள் தொடர்பான பிரச்சனை தேர்தல் பிரசாரத்தில் பிரதானதாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு ஹேமந்த் சோரன்தான் முக்கிய காரணம். அவர் ஊடுருவல்காரர்களை அனுமதிக்கிறார். இதற்கு ஹேமந்த் சோரன் பொறுப்பேற்க வேண்டும். பிரதமர் மோடி ஜன்ஜதியா கவுரவ் வர்ஷ் (Janjatiya Gaurav Varsh) உள்ளிபட்ட பல்வேறு திட்டங்களை அவர்களுக்கு அறிவித்து பழங்குடியினரின் பெருமைமை மீட்டெடுத்தார் என பா.ஜ.க. தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.