இந்தியா

மோடி பள்ளிக்கு சென்றிருந்தால் காந்தியை அறிந்திருப்பார்- பிரகாஷ்ராஜ் கிண்டல்

Published On 2024-05-30 11:32 GMT   |   Update On 2024-05-30 11:32 GMT
  • 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை
  • உங்கள் வாட்ஸ்அப் பல்கலைகழகத்தை தாண்டி கொஞ்சம் வளருங்கள்.

1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"மிஸ்டர் மோடிஜி நீங்கள் பள்ளிக்கு சென்றிருந்தால் எங்கள் மகாத்மாவை யாரென்று அறிந்திருப்பீர்கள். தயவு செய்து உங்கள் வாட்ஸ்அப் பல்கலைகழகத்தை தாண்டி கொஞ்சம் வளருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News