நடைபயணம் ஏன்? என்பதுடன் பேச்சை தொடங்கினார் ராகுல் காந்தி
- பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.
- இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்.
மக்களவையில் மீண்டும் என்னை நியமித்ததிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
முன்பு, பாராளுமன்றத்தில் பேசியபோது அதானியை மையமாக வைத்து பேசினேன்.
அதானி குறித்து நான் தெரிவித்த கருத்து சில மூத்த உறுப்பினர்களுக்கு கஷ்டமாக இருந்தது. இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்.
பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றது ஏன் என கேள்வி எழுப்பினர்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றேன். எனது யாத்திரை இன்னும் முடியவில்லை.
கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கியபோது நாட்டையும், மக்களவையும் பார்க்க விரும்பினேன்.
யாத்திரையின் தொடக்கத்தில் 8 முதல் 10 கிலோமீட்டர் நடந்தே சென்றேன்.
யாத்திரையின்போது நிறைய பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.
யாத்திரை செல்ல செல்ல சாமானிய மக்களை சந்திக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது.
பயிர் காப்பீடு குறித்து விவசாயி பகிர்ந்த வலி என்னையும் தொற்றிக் கொண்டது.
நாட்டு மக்களின் வலியை உணர வேண்டும். மக்களின் துக்கமே எனது துக்கம். அவர்களின் வலியே எனது வலி.