ஆனந்த் அம்பானியின் 2-வது Pre-Wedding நிகழ்ச்சி: குடும்பத்துடன் பங்கேற்கும் தோனி
- திருமணத்திற்கு முந்தைய வைபவ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
- 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக மட்டும் ரூ.1,250 கோடி செலவிடப்பட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்தது.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய வைபவ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் வரை முதல் கொண்டாட்டம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ரித்தேஷ், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கத்ரீனா கயூப், ஜெனிலியா, ராணி முகர்ஜி, சோனா முகர்ஜி, நடாஷா பூனவல்லா, இயக்குநர் அட்லி உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா உள்பட வெளிநாட்டு பிரபலங்களும், இந்திய தொழிலதிபர்கள் என மொத்தம் 1,000 சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்காக மட்டும் ரூ.1,250 கோடி செலவிடப்பட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்தது.
இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் அடுத்தகட்டமாக, சொகுசு கப்பலில் முக்கிய பிரமுகர்களுக்கு பார்ட்டி நடைபெறவுள்ளது. இதுதொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இத்தாலியில் வருகிற 29-ம் தேதி கிளம்பும் இந்த சொகுசு கப்பல், ஜூன் 1-ம் தேதியன்று ஸ்விட்சர்லாந்தில் நிறைவுபெறும். இந்த சொகுசு கப்பல் பார்ட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 வி.ஐ.பி-க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், ரன்பீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ்.தோனி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எம்.எஸ்.தோனி, தனது மனைவி மற்றும் மகளுடன் புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
MS Dhoni leaves for the Anant Ambani pre-wedding cruise party. pic.twitter.com/Vq01IqqsLs
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 27, 2024