இந்தியா (National)

'ஒருவரின் உயிரை காப்பதே என் மதம்': கன்வார் யாத்திரை பக்தர்களை காப்பாற்றிய முஸ்லிம் காவலர்

Published On 2024-07-25 07:56 GMT   |   Update On 2024-07-25 08:37 GMT
  • உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்றுவதே எனக்கு முக்கியம்.
  • எனக்கு அவருடைய சாதி, மதத்தை பற்றி கவலை இல்லை.

புனித மாதமான சவான் (ஷ்ரவான்) மாதம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் (Kanwariyas) பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஹரித்வார் செல்வார்கள்.

அவர்கள் கங்கையில் புனித நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை கன்வார் யாத்திரை என அழைப்பார்கள். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2-ந்தேதி முடிவுடையும்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் கன்வார் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் தவறி விழுந்துள்ளனர். அப்போது உடனடியாக செயல்பட்ட பேரிடர் மீட்புப்படை தலைமை காவலாரான ஆசிப் அலி தனது சக காவலர்களுடன் இணைந்து அவர்களை காப்பாற்றியுள்ளார்.

கங்கை ஆற்றில் தவறி விழுந்த 5 பக்தர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கன்வார் யாத்திரை பக்தர்களை ஒரு முஸ்லிம் காவலர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை நடந்துள்ளது.

"உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்றுவதே எனக்கு முக்கியம். எனக்கு அவருடைய சாதி, மதத்தை பற்றி கவலை இல்லை. என்னை பொருத்தவரை அவர் மனிதர். அவர் உயிரை காப்பதே என் மதம். ஒருவரின் உயிரை காப்பாற்றும் போதெல்லாம் எனக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறது" என்று ஆசிப் அலி உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது.

உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் கன்வார் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News