இந்தியா

நிபா வைரஸ்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 24-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2023-09-16 09:27 IST   |   Update On 2023-09-16 09:27:00 IST
  • கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
  • நேற்று வரை ஆறு பேர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கேரள மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய குழு அம்மாவட்டம் சென்று ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், படிப்பு சார்ந்த நிறுவனங்கள், டியூசன் மையங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் வகுப்புகளுக்கு தடையில்லை.

கோழிக்கோடு மாவட்டத்தில் 1080 பேர், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாக கருதப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 130 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 327 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவார்கள். 29 பேர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

22 பேர் மலப்புரம், ஒருவர் வயநாடு, தலா மூன்று பேர் கண்ணூர், திரிச்சூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்த தகவலை சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News