நிதிஷ்குமார் ஒரு 'பிரதமர் மெட்டிரியல்', ஆனால் பாஜக கூட்டணியில் - ராஷ்டிரிய ஜனதா தளம் கிண்டல்
- பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
- சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.
இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தந்தால் நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக கூறினார்கள் என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கே.சி.தியாகி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "இதுதொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து, இது தொடர்பாக பேசிய பீகார் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மிருத்யுஞ்சய திவாரி, "நிதிஷ்குமார் ஒரு 'பிரதமர் மெட்டிரியல்', ஆனால் பாஜக கூட்டணியில் அவர் தலை குனிந்து உள்ளார்" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.