இந்தியா

மினிமம் பேலன்ஸ் இல்லை.. ரூ. 2331 கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்- கடந்த ஆண்டை விட 25% அதிகம்..!

Published On 2024-07-30 06:16 GMT   |   Update On 2024-07-30 07:40 GMT
  • இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட 25 சதவீதம் அதிகமாகும்.
  • அதிகபட்சமாக பஞ்சாப் தேசிய வங்கிக் பயனர்களிடமிருந்து மொத்தமாக ரூ.633 கோடி வசூல்

2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை [மினிமம் பேலன்ஸ்] இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ. 2331 கோடி என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி மக்களவையில் தெரிவித்துள்ளார். இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட 25 சதவீதம் அதிகமாகும்.

அதிகபட்சமாக பஞ்சாப் தேசிய வங்கிக் பயனர்களிடமிருந்து மொத்தமாக ரூ.633 கோடியும், பேங் ஆப் பரோடா பயர்களிடமிருந்து மொத்தமாக ரூ.386 கொடியும் வங்கிக் கணக்கில் மாதாந்திரமாக மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது. மினிமம் பேலன்ஸ் தொகையானது வங்கிக்கு வங்கி, இடங்களை பொறுத்து மாறுபடும். மொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடிவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

முறையான மினிமம் பேலன்ஸ் இல்லாமல் வங்கிக்கணக்குகளில் அடுத்தமுறை பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது அதிலுருந்து அபாரதத் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தமுடியாத நிலையும் ஏற்படவே செய்கிறது. கடந்த காலங்களில் மினிமம் பேலன்ஸை பெரிதும் வலியுறுத்தாத வங்கிகள், சமீப காலமாக மிகவும் தீவிரமாக கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News