இந்தியா

பிரஜ்வால் ரேவண்ணாவின் ஜெர்மனி பயணம்: வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

Published On 2024-05-02 12:02 GMT   |   Update On 2024-05-02 12:02 GMT
  • பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு.
  • வீடியோக்கள் வெளியான நிலையில், ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.

தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருப்போது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார்.

அவரை விசாரணைக்கு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி ஓட பா.ஜனதா உதவியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விசா கிடைத்தது எப்படி? என கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.

பிரஜ்வால் ரேவண்ணா விசாரணைக்காக இந்தியா அழைத்து வரப்படுவாரா? அல்லது விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோரை போன்று வெளிநாட்டிலேயே தங்கிவிடுவாரா? என்பது பின்னர்தான் தெரியவரும்.

Tags:    

Similar News