இந்தியா

இந்து அல்லாதவர்கள் கிராமத்திற்குள் நுழைய கூடாது.. சர்ச்சை பேனர்களை அகற்றிய போலீசார்

Published On 2024-09-08 07:11 GMT   |   Update On 2024-09-08 07:11 GMT
  • உத்தரகண்ட் மாநிலத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • ஏஐஎம்ஐஎம் கட்சியினர் இத்தகைய பேனர்கள் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்

உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேனர்களில், "இந்துக்கள் அல்லாதவர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் கிராமத்திற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. கிராமத்தில் எங்காவது நீங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிதிக்கப்ட்டுள்ளது.

முஸ்லிம் சேவா சங்கதன் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் இத்தகைய பேனர்கள் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து சில கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த இத்தகைய பேனர்களை போலீசார் அகற்றியுள்ளனர். இத்தகைய பேனர்கள் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News