இந்தியா
நவீன தொழில்நுட்பத்தில் ஓங்கோல் இன கன்று பிறப்பு
- கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
- பசுவுக்கு ஓங்கோல் இனத்தின் கரு செலுத்தப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் ஓங்கோல் இன மாடுகள் அழிந்து வருகின்றன. இந்த மாடுகளுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. இதனால் ஓங்கோல் இன கன்று குட்டிகளை உற்பத்தி செய்ய நவீன தொழில்நுட்பத்தை கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அன்னமய்யா மாவட்டம் ரயில்வே கோடூர் மண்டலம் ஜோதி காலனியை சேர்ந்த லட்சுமி தேவி என்பவர் ஜெர்சி பசு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த பசுவுக்கு ஓங்கோல் இனத்தின் கரு செலுத்தப்பட்டது. இதன் மூலம் பசு சினை பிடித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பசுவுக்கு ஓங்கோல் கன்று குட்டி பிறந்தது.
ராயலசீமா பகுதியில் முதல் கரு பரிமாற்றம் மூலம் ஓங்கோல் இனத்தை கன்று உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கரு பரிமாற்றம் மூலம் மாடுகள் உற்பத்தி செய்யப்படும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.