இந்தியா

90 நிமிடங்களில் மணிப்பூரை பற்றி ஒரு வார்த்தை இல்லை: மோடி பேச்சு குறித்து காங்கிரஸ் விமர்சனம்

Published On 2023-08-11 06:19 GMT   |   Update On 2023-08-11 06:19 GMT
  • மக்களவையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி
  • முன்னதாகவே அவைக்கு வந்திருந்தால் ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெற்றிருக்கும்- கார்கே

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அதன்மீதான விவாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதில் உரை அளித்தார்.

அப்போது எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் எதிர்க்கட்சிகள் குறித்தே பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், அவையில் நாங்கள் இருந்த 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரம் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. மக்களவையை தேர்தல் பேரணியாக பயன்படுத்தியுள்ளார் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் ''கடைசியாக பிரதமர் மோடி மக்களவை வந்து பேசியதற்கு நன்றி. முன்னதாகவே, தனது ஆணவத்தை விட்டுவிட்டு பாராளுமன்றம் வர சம்மதம் தெரிவித்திருந்தால், பராளுமன்றத்தின் மதிப்புமிக்க நேரம் சேமிக்கப்பட்டு, சிறந்த விவாதத்திற்குப் பிறகு, முக்கியமான மசோதாக்கல் நிறைவேற்றப்பட்டிருக்கும்'' என்றார்.

''எதிர்பாராத விதமாக மணிப்பூர் விசயம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஆனால், நீங்கள் மக்களவையை தேர்தல் பேரணி போன்று பயன்படுத்தியுள்ளீர்கள்'' என மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், ஒட்டுமொத்த பேச்சியின்போது பிரதமர் மோடி காங்கிரசை தாக்கு பேசினார். மணிப்பூரை பற்றி சிறிதளவே பேசியுள்ளார். காங்கிரசை விமர்சனம் செய்தபோது, அவரிடம் காங்கிரஸ் மீதான பயனத்தை நாங்கள் பார்க்க முடிந்தது.'' என்றார்.

Tags:    

Similar News