இந்தியா

திருவிதாங்கூர் தேவசம்போர்டு கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு

Published On 2024-05-08 06:15 GMT   |   Update On 2024-05-08 06:15 GMT
  • சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன.
  • அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறப்பு.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில், பத்ம நாபபுரம் பத்மநாத சுவாமி கோவில் உள்ளிட்ட ஏராள மான பிரசித்தி பெற்ற கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஆண்டு தோறும் வருகின்றனர்.

கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட 1,200-க்கும் மேற்பட்ட கோவில்களை திருவிதாங்கூர் தேவ சம்போர்டு நிர்வகித்து வரு கிறது. அவற்றின் வழி காட்டுதலின் படியே அந்த கோவில்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மல்லி, செம்பருத்தி, துளசி உள்ளிட்ட 5 மலர்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

கேரள மாநிலத்தில கடந்த சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன. மேலும் அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்த சம்பவங்கள் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்தே திரு விதாங்கூர் தேவசம்போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 வித மலர்களை மட்டும் பயன்படுத்த அறிவுரை வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறது. இறந்த நபரின் உடல் பரிசோதனையில் அவரது மரணத்துக்கு அரளியின் நச்சுத்தன்மை தான் காரணம் என்பது உறுதி செய்யப்ட்டால் இந்த பூக்களின் பயன்பாடு முற்றிலுமாக நீக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கோவில்களில் பயன்படுத்தப்படும் 5 வகை மலர் செடிகளை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது தவிர தென்னை, பாக்கு மரங்களும் நடவு செய்யப்பட உள்ளது என்றார்.

Tags:    

Similar News