பாராளுமன்ற தேர்தல்: கண்ணூஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி
- உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
- 2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்
உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடுகிறார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
இதற்கு முன்னதாக இந்த தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுவார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்திருந்தது.
2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 2012 இல் அவர் முதலமைச்சரான பிறகு அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி வெற்றி பெற்றார். பின்னர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அத்தொகுதியில் டிம்பிள் வெற்றி பெற்றார். ஆனால் அவர் 2019 இல் பாஜகவின் சுப்ரத் பதக்கிடம் அவர் தோல்வியடைந்தார்.
இந்த தொகுதிக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்கு உள்ள 80 இடங்களில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது, மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் அதன் சிறிய கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.