இந்தியா

பாகிஸ்தான் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.. பிரிவினை தவறு என நம்புகிறார்கள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பரபரப்பு பேச்சு

Published On 2023-03-31 17:29 GMT   |   Update On 2023-03-31 17:29 GMT
  • பாரதத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
  • தற்காப்புக்காக தகுந்த பதிலடி கொடுக்கும் கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள்

போபால்:

இளம் புரட்சியாளர் ஹேமு கலானியின் பிறந்தநாளையொட்டி போபாலில் நடைபெற்ற விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பாரதத்தை பிரித்தது தவறு என்று பாகிஸ்தான் மக்கள் இப்போது சொல்கிறார்கள் என்றார்.

அவர் மேலும் பேசுகையில், 'அந்த நாடு 1947க்கு முன் பாரதமாக இருந்தது. பிடிவாதத்தால் பாரதத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அங்கே வேதனை இருக்கிறது, இந்தியாவில் மகிழ்ச்சி இருக்கிறது' என் தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இப்போதுள்ள மோசமான உறவு குறித்து பேசிய அவர், மற்ற நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அழைப்பு விடுக்கும் கலாச்சாரம் இந்தியாவுக்கு கிடையாது என்றும், தற்காப்புக்காக தகுந்த பதிலடி கொடுக்கும் கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள் என்றும் கூறினார்.

Tags:    

Similar News