கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பா.ஜ.க. கண்டனம்
- கர்நாடகாவில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது.
- இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை முறையே 29.84 சதவீதம் மற்றும் 18.44 சதவீதம் என அரசாங்கம் திருத்தியுள்ளது.
இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க., மாநில அரசு கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை முதல் மந்திரி மற்றும் அரசு திரும்பப் பெறாவிட்டால் திங்கட்கிழமை மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட மையங்களிலும், பிற இடங்களிலும் போராட்டம் நடத்துவோம். எரிபொருள் விலை உயர்வு முடிவை திரும்பப் பெறவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.