இந்தியா

மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

Published On 2024-07-13 04:04 GMT   |   Update On 2024-07-13 04:04 GMT
  • மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும்.
  • இந்த அதிவேக ரெயில் பாதையில் மொத்தம் 12 ரெயில் நிலையங்கள் இருக்கும்.

மும்பை-அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும். இதில் 348 கிமீ குஜராத்திலும் 156 கிமீ மகாராஷ்டிராவிலும் அடங்கும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செயல்படக்கூடிய புல்லட் ரெயில் மும்பை-அகமதாபாத் இடையேயான தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.

இந்த அதிவேக ரெயில் பாதையில் மொத்தம் 12 ரெயில் நிலையங்கள் இருக்கும். இந்த 12-ல், 8 ரெயில் நிலையங்கள் குஜராத்திலும், 4 ரெயில் நிலையங்கள் மகாராஷ்டிராவிலும் இருக்கும். இந்த ரெயில் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே வரையறுக்கப்பட்ட நிறுத்தங்களுடன் பயணிக்க தோராயமாக 2.07 மணிநேரம் எடுக்கும், மொத்த நிறுத்தங்களுடன் 2.58 மணிநேரம் ஆகும்.

புல்லட் ரெயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குஜராத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களிலும் அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்து, மேல்கட்டமைப்புகள் கட்டும் பணி மேம்பட்ட நிலையில் உள்ளது.

குஜராத்தில் அமைந்துள்ள வாபி, பிலிமோரா, சூரத், ஆனந்த், அகமதாபாத் ஆகிய 5 புல்லட் ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன . இந்த புல்லட் ரெயில் நிலையங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News