இந்தியா

ஜார்க்கண்டில் ரூ.83,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்- பிரதமர் தொடங்கி வைத்தார்

Published On 2024-10-02 11:30 GMT   |   Update On 2024-10-02 11:30 GMT
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில் மீண்டும் ஒருமுறை பங்கெடுக்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது.
  • திட்டங்கள் பழங்குடி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும் என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதிக்கு பிரதமர் இன்று வருகை தந்திருந்நதார். அங்கு, ரூ.83,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததுடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 15-ந்தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிைலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில், "ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில் மீண்டும் ஒருமுறை பங்கெடுக்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜாம்ஷெட்பூரில் பல நூறு கோடிகள் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தேன்.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஜார்க்கண்டில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வீடுகளை பெற்றுள்ளனர். தற்போது மீண்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்கள் ஜார்க்கண்டில் தொடங்கி வைக்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் பழங்குடி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News