இந்தியா

ரூ.15 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார்: பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 'ரோடுஷோ'

Published On 2024-03-02 10:01 GMT   |   Update On 2024-03-02 10:10 GMT
  • மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார்.
  • நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.

கிருஷ்ணாநகர்:

பிரதமர் மோடி நேற்று மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றார். அங்கு ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ.720 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

இன்று பிரதமர் மோடி ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார். அங்கு அவர் ரோடு ஷோ நடத்தினார்.

திறந்த ஜீப்பில் நின்றபடி ஊர்வலமாக சென்றார். இதில் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து கை அசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். அப்போது மோடியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.

கிருஷ்ணா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மின்சாரம், ரெயில், சாலை உள்ளிட்ட துறைகளில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்த திட்டங்கள் மேற்கு வங்காளத்தை வளர்ந்த மாநிலமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டவை. இது மேற்கு வங்காளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேகத்தை அளிக்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் ரெயில்வே கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக அரசு செலவிடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News