இந்தியா

2 நாள் பயணமாக பிரதமர் மோடி அசாம் பயணம்

Published On 2024-01-31 15:32 GMT   |   Update On 2024-01-31 15:32 GMT
  • பல்வேறு ஆயத்த கூட்டங்களுக்கு முதல்வர் சர்மா தலைமை தாங்கினார்.
  • பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாநிலத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 3ம் தேதி செல்கிறார். அங்கு, 11 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமரின் வருகைக்கு முன்னதாக பல்வேறு ஆயத்த கூட்டங்களுக்கு தலைமை தாங்கியதாக அம்மாநில முதல்வர் சர்மா கூறினார்.

இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "அசாம் மக்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டும் என்ற எங்கள் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதில் பெரிய கவுரவமாக கருதி, மிகுந்த மகிழ்ச்சியுடன் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

11,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்" என்றார்.

மேலும், பிரதமரின் திட்டமிடப்பட்ட பயணத்தை கருத்தில் கொண்டு முதல்வர் சர்மா தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தியதாக முதல்வர் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News