இந்தியா

பிரதமா் மோடியுடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திாி சந்திப்பு

பிரதமா் மோடியுடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திாி சந்திப்பு

Published On 2022-06-08 19:31 GMT   |   Update On 2022-06-08 19:31 GMT
  • டெல்லியில் பிரதமா் மோடியை ஈரான் வெளியுறவுத்துறை மந்திாி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் சந்தித்துப் பேசினாா்.
  • ஈரான் வெளியுறவுத் துறை மந்திாி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுடெல்லி:

ஈரான் வெளியுறவுத் துறை மந்திாி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் பிரதமா் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட டுவிட்டா் பதிவில் கூறியதாவது:

இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நாகரீக தொடர்புகளை மேலும் மேம்படுத்துவது குறித்த பயனுள்ள விவாதத்திற்கு வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனை வரவேற்பதில் மகிழ்ச்சி. நமது உறவுகள் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளித்து, பிராந்திய பாதுகாப்பு மற்றும் செழுமையை மேம்படுத்தியுள்ளன என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News